பசியால் தனது 7 வயது மகன் இறந்துவிட்டதாக கூறும் தாய்..!
சென்னை திருநின்றவூரில் பசியால் இறந்ததாக கூறி மகனின் உடலுடன் மூன்று நாட்கள் தாய் வசித்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீடிஎஸ் சாலையில் ரேவதி என்பவர் கணவரை பிரிந்து 7 வயது மகனுடன் வசித்து வந்துள்ளார்.
ஹோமியோபதி மருத்துவம் பார்த்து வந்த ரேவதி கொரொனா பொது முடக்கத்தால் வருவாய் இன்றி தவித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட அவர் தனது மகன் பசியால் இறந்து விட்டதாக கூறியிருக்கிறார்.
அங்கு சென்ற காவலர்கள் சிறுவன் இறந்து மூன்று நாட்களுக்கு மேலாக இருக்கும் என்றும் அந்த உடலுக்கு அருகிலேயே ரேவதி இருந்ததாகவும் கூறுகின்றனர். மேலும் பசியால் சிறுவன் உயிரிழந்தானா அல்லது பெற்ற மகனை கொன்றுவிட்டு ரேவதி நாடகமாடுகிறாரா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.






