--- --:--:-- --

புதுச்சேரியில் பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்வு!

download

தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் ஆவின் பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்திருக்கிற.து இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது பால் பதப்படுத்துதல் மற்றும் போக்குவரத்து அலுவலக செலவுகள் கணிசமாக உயர்ந்து இருப்பதால் தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.

 

இந்தநிலையில் புதுச்சேரியில் பால் விற்பனை மற்றும் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு இருப்பதாக அம்மாநில பால்வளத் துறை அமைச்சர் கந்தசாமி பேரவையில் அறிவித்திருக்கிறார். ஆவின் பாலின் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்படுவதாகவும், கொள்முதல் விலை 4 ரூபாயாக உயர்த்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பாலின் விலை நாளை முதல் நடைமுறைக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 36 ரூபாயில் இருந்து 42 ரூபாயாகவும்., சிறப்பு சமன் படுத்தப்பட்ட பால் 38 ரூபாயிலிருந்து 44 ரூபாயாக உயர்ந்திருக்கிறது.நிலைப்படுத்திய பால் லிட்டருக்கு 42 ரூபாயிலிருந்து 48 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் புதுச்சேரியில் உள்ள 40 ஆயிரம் பால் உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon