--- --:--:-- --

எம்.ஜி‌. ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் முதுநிலை படிப்புகளை நடத்த தடை!

dr-mgr-university

இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெறாமல் முதுநிலை மருத்துவ டிப்ளோமோ படிப்புகளை நடத்த தம்ழ்நாடு டாக்டர்.எம்.ஜி‌. ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்திற்க்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து இருக்கிறது. ஏற்கனவே நீதிமன்றம் இது தொடர்பாக பிறப்பித்த உத்தரவை மதிக்காமல் செயல்பட்டதாக டாக்டர்.எம்.ஜி‌. ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்திற்க்கு ஐந்து லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 

அந்த தொகையை நான்கு வாரங்களுக்குள் செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெறாமல் படிப்புகளை நடத்துவது பற்றி புகார் எழுந்தது. விசாரணையின் போது இதுபோன்ற படிப்புகளை வழங்குவது சட்டவிரோதம் அல்ல என்றும் மருத்துவர்கள் பற்றாக்குறையை தீர்க்கவே பல்கலைகழக நிர்வாக குழு இந்த முடிவை எடுத்து இருப்பதாகவும் தமிழ்நாடு டாக்டர்.எம்.ஜி‌. ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் தெரிவித்தது.

 

ஆனால் மத்திய அரசு அல்லது மருத்துவ கவுன்சில் ஒப்புதல் இல்லாமல் எந்த படிப்பையும் வழங்க முடியாது என்றும் இது குறித்து ஏற்கனவே நீதிமன்றம் பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாகவும் மருத்துவ கவுன்சில் தரப்பில் வாதிடப்பட்டது. இதனை ஏற்றுகொண்ட நீதிபதி சுந்தர் இது போன்ற படிப்புகளை நடத்த அனுமதித்தால் அதில் படித்து முடித்தவர் அந்த பிரிவில் நிபுணர் என்று மக்கள் தவறாக புரிந்து கொள்வதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறி தடை விதித்தார்.

Leave a Reply

Right Menu Icon