ஈரான் போர்: அமேசான் நிறுவனத்தின் மீது 3-வது முறையாக தாக்குதல்
பஹ்ரைனில் உள்ள அமேசான் நிறுவனத்தின் கிளவுட் கம்ப்யூட்டிங் (Cloud Computing) வணிகப் பிரிவின் மீது ஈரான் புதன்கிழமை தாக்குதல் நடத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. முன்னதாக, பஹ்ரைன் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, ஈரானிய தாக்குதலைத் தொடர்ந்து ஒரு நிறுவனத்தின் வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், சிவில் பாதுகாப்புப் படையினர் அந்தத் தீயை அணைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மே மாத வெயிலில் ஒரு ‘ஜில்’ சாய்ஸ்… ரூ.20,000 செலவில் ஃபாரின் ட்ரிப்; கூட்டமே இல்லாமல் ரசிக்க இங்க போங்க இருப்பினும், ஈரானால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் அந்த நிறுவனத்தின் பெயரையோ, உயிரிழப்புகள் அல்லது சேதத்தின் அளவு குறித்த எந்த விவரங்களையும் அவர்கள் தெரிவிக்கவில்லை. ஈரான் மீதான அமெரிக்கா -இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலுக்குப் பதிலடியாக, மத்திய கிழக்கில் உள்ள மைக்ரோசாப்ட், ஆப்பிள், ஐ.பி.எம், டெஸ்லா மற்றும் அமேசான் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்களைக் குறிவைப்போம் என்று ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை அச்சுறுத்திய மறுநாளே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து அமேசான் நிறுவனம் இதுவரை எந்தப் பதிலும் அளிக்கவில்லை. மத்திய கிழக்கில் தற்போது நிலவி வரும் மோதல்களுக்கு மத்தியில், பஹ்ரைன் பிராந்தியத்தில் உள்ள தனது ‘அமேசான் வெப் சர்வீசஸ்’ (AWS) பாதிக்கப்பட்டுள்ளதாக அமேசான் கடந்த வாரம் தெரிவித்திருந்தது. இந்த மாதத்தில் மட்டும் அமேசான் நிறுவனத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்படுவது இது மூன்றாவது முறையாகும்.
அப்பகுதியில் ட்ரோன் நடமாட்டம் காரணமாகவே இந்த இடையூறு ஏற்பட்டதாக அமேசான் செய்தித் தொடர்பாளர் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார். பஹ்ரைன் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் சரிசெய்யப்படும் வரை, வாடிக்கையாளர்களை மற்ற ஏ.டபிள்யூ.எஸ் பகுதிகளுக்கு மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அமேசான் மேலும் கூறியது. இருப்பினும், சேதத்தின் அளவு குறித்து அந்நிறுவனம் எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை.
நிலைமை மாறிக்கொண்டே இருப்பதால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணிச்சுமை கொண்டவர்கள் தொடர்ந்து மற்ற இடங்களுக்குத் தங்கள் தரவுகளை மாற்றிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று அமேசான் முன்னதாகத் தெரிவித்திருந்தது.





