மோடியின் பதவியேற்பு விழாவில் திருநங்கைகளுக்கு அழைப்பு..!
மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க 50 திருநங்கைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, விழாவிற்கு வருகை புரிந்தவர்களை பாஜக எம்பி வீரேந்திர குமார் வரவேற்றார்.
இது குறித்து அவர் கூறும்போது, பதவியேற்பு விழாவிற்கு திருநங்கைகள் முறைப்படி அழைக்கப்படுவது இதுவே முதல்முறை எனவும், இது பிரதமரின் ‘அனைவரின் ஆதரவும், அனைவரின் நம்பிக்கையும், கூட்டு முயற்சியும்’ என்ற அழைப்பின் ஒரு பகுதி எனவும் கூறினார்.





