மனைவி மீது நாட்டு வெடிகுண்டு வீசிய கணவர்..தென்காசியில் அதிர்ச்சி..!
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே மனைவி மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வல்லம் பகுதி சேர்ந்தவர் சந்தனகுமார் அவரது மனைவி கௌசல்யா ஆகியோருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சந்தனகுமார் வீட்டில் மறைத்து வைத்திருந்த நாட்டுப்புற வெடிகுண்டை எடுத்து கவுசல்யாவின் தலையில் வீசிதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்தவர் உடனடியாக மீட்கப்பட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்த தகவல் அறிந்து செங்கோட்டை போலீசார் சந்தனகுமாரி கைது செய்தனர். நாட்டு வெடிகுண்டு எப்படி கிடைத்தது அவரை தயார் செய்தாரா வேறு யாரேனும் கொடுத்தார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





