--- --:--:-- --

வரும் 7 -ம் தேதி கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் மாநாடு:  தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் அறிவிப்பு

IMG-20190804-WA0027

கோவையில் தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 7 -ம் தேதி மாபெரும் கோரிக்கை மாநாடு நடைபெற உள்ளதாக அச்சங்கத்தின் மாநில பொதுசெயலாளர் தெரிவித்துள்ளார்.

தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேசனின் கோவை வடக்கு பகுதி பிரிவின் 10 ஆண்டு விழா இரத்தினபுரி பகுதியில் நடைபெற்றது. சங்கத்தின் மாநில நிர்வாகிகள் பரமேஸ்வரன் தினகரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த சவுண்ட் சர்வீஸ்,மற்றும் டெக்கரேட்டர்ஸ் ,டெண்ட் ஹவுஸ் என ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் நூற்றுக்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

 

விழாவில் சிறுவர்களின் சாகச நடனங்கள் உட்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

முன்னதாக விழாவில் கலந்து கொண்ட அச்சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் மணிமாறன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக ஹையர் ஒலி,ஒளி அமைப்பாளர்கள் பந்தல் அமைப்பாளர்கள் சமையல் பாத்திரங்கள் வாடகைக்கு விடுபவர்கள் ஆகியோருக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும் என தமிழக அரசை நீண்ட காலம் வலியுறுத்தி வருவதாகவும், கண்காட்சி என்ற போர்வையில் தனியார் நிறுவனங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை நசுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த அவர்,வரும் ஏழாம் தேதி கோவையில் இவை அனைத்தையும் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் மாபெரும் கோரிக்கை மாநாடு கோவையில் நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon