சுகாதார சீர்கேடு மற்றும் குடிநீர் தட்டுப்பாடு குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் ! விஜயபாஸ்கர் அறிவிப்பு
சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சுகாதார சீர்கேடு மற்றும் குடிநீர் தட்டுப்பாடு குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த கருத்தரங்கம் சென்னை கிண்டியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் அரசு மருத்துவ பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
இதில் அமைச்சர் விஜயாபாஸ்கர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.இது போன்றகருத்தரங்குகள் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படும் என்று கூறினார்.





