--- --:--:-- --

இன்று குரூப் 4 தேர்வு – தேர்வர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

6

ரசுத் துறைகளில் காலியாக உள்ள 6,244 பணியிடங்களை நிரப்ப இன்று குரூப் 4 தேர்வு நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள 7247 மையங்களில் சுமார் 20 லட்சம் பேர் எழுதுகின்றனர்.

 

கிராம நிர்வாக அலுவலர், பில் கலெக்டர், ஆவின் நிர்வாக உதவியாளர், இளநிலை நிர்வாகி, வனக் காவலர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு குரூப் 4 தேர்வை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது.

 

அந்த வகையில், தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு, இன்று நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஜனவரி 30 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 28 ஆம் தேதி வரை நடைபெற்றது. சுமார் 20 லட்சம் பேர் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் 7,247 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.

 

சென்னையை பொறுத்தவரை 432 மையங்களில் சுமார் ஒரு லட்சத்து 33 ஆயிரம் பேர் தேர்வு எழுத உள்ளனர். காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை 3 மணி நேரம் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பு தேர்வுக் கூடத்துக்கு சென்றுவிட வேண்டும் என தேர்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Right Menu Icon