மீண்டும் புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை
2025ஆம் ஆண்டில் தங்கம் விலை பல நாட்கள் வரலாறு காணாத உச்சத்தை தொட்டு நகை பிரியர்களின் வாயை பிளக்க செய்தது. தொடர்ந்து 2026 புத்தாண்டின் முதல் நாளே தங்கம் விலை குறைந்தது. ஆனால் அதை தொடர்ந்து தொடர்ச்சியாக 3 நாட்களுக்கும் மேலாக தங்கம் விலை உயர ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.
அந்த வகையில் நேற்று கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,830க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,02,640க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,870க்கும், சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் 1,02,960க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல, 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,735க்கும் சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.85,880க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் அதிரடியாக கிராமுக்கு ரூ.12 உயர்ந்து ஒரு கிராம் ரூ.283க்கும், கிலோவுக்கு மட்டுமே ரூ.12,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.2,83,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.





