--- --:--:-- --

13 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை பறிமுதல் செய்துள்ள பறக்கும் படை..!

5

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே சுமார் 13 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். பாளையங்கோட்டை அருகே உள்ள டக்கரம்மாள்புரம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

 

அப்போது அந்த வழியே மதுரையிலிருந்து நாகை கோவிலுக்கு சென்ற வாகனத்தை அதிகாரிகள் மடக்கிப்பிடித்து சோதனையில் ஈடுபட்டனர் . வாகனத்தை முழுவதுமாக பரிசோதனைக்கு உட்படுத்தி12 கோடியே85 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்தது தெரியவந்தது.

 

இதனை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அரசு கருவூலத்தில் அந்த நகைகளை ஒப்படைத்தனர். சிறப்பு தாசில்தார் தலைமையில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆவணங்கள் மற்றும் நகைகளை சோதனை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon