அஜீத்தின் தெலுங்கு ரீமேக் டிரைலரை காண கண்ணாடியை உடைத்துக் கொண்டு சென்ற ரசிகர்கள்..!
பவன் கல்யாண் நடித்துள்ள வக்கில்சாப் படத்தின் டிரைலரை காணக் கூடிய ரசிகர்கள் விசாகப்பட்டினத்தில் கண்ணாடியை உடைத்துக் கொண்டு திரையரங்கிற்கு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படம் தெலுங்கில் வக்கில்சாப் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. பவன் கல்யன், நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் விசாகப்பட்டினத்தில் உள்ள திரையரங்கில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
2 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்கள் ஒரே நேரத்தில் திரையரங்கிற்கு செல்ல முயற்சி செய்தனர். கண்ணாடி கதவை உடைத்துக்கொண்டு ரசிகர்கள் திரையரங்கத்திற்கு ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது .இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.






