--- --:--:-- --

கணவர் வீட்டின் முன்பு 7 மாத கர்ப்பிணியை புதைத்த குடும்பத்தினர்..!

7

புதுக்கோட்டை அருகே வரதட்சணை கொடுமையால் கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்டதாக கூறி அவரது உறவினர்கள் கர்ப்பிணிப் பெண்ணின் சடலத்தை அவரது கணவர் வீட்டின் முன் குழித்தோண்டி புதைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

 

கீரனூர் பகுதியை சேர்ந்த அரவிந்துக்கும், நாகேஸ்வரிக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்ற நிலையில் நாகேஸ்வரி 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இதனிடையே அவரது மாமனார் மாமியார் கணவர் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படும் நிலையில் அவர் நாகேஸ்வரி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 

புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் ராஜேஸ்வரி உடலை வாங்கிய அவரது உறவினர்கள் நாகேஸ்வரி உயிரிழப்புக்கு நியாயம் கேட்டு தேசிய நெடுஞ்சாலையில் சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல்துறையினர் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டனர்.

 

பெண்ணின் கணவர் வீட்டார் அனைவரும் தலைமறைவாகி விட்ட நிலையில் கணவர் அரவிந்த் வீட்டில் முன்பு நாகேஸ்வரியின் சடலத்தை குழித்தோண்டி புதைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை தோண்டி எடுத்து சுடுகாட்டில் புதைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

 

Right Menu Icon