--- --:--:-- --

காவல் நிலையத்திற்கு 2 மணி நேரம் மின்சாரத்தை துண்டித்த மின்வாரிய ஊழியர்கள்..!

8

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகே மின் வாரிய ஊழியர் இருசக்கர வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்ததால் காவல் நிலையத்திற்கு இரண்டு மணி நேரம் மின்சாரத்தை மின் வாரிய ஊழியர்கள் துண்டித்த சம்பவம் நடந்துள்ளது. கூமாபட்டியில் மின்வாரிய ஊழியர் சைமன் வழக்கம்போல பணிக்கு வந்தார்.

 

இருசக்கர வாகனத்தில் வந்த இவர் தன்னுடன் இரண்டு பேரை அழைத்து வந்துள்ளார். இருசக்கர வாகனத்தில் மூன்று பேராக வந்ததால் சைமனின் வாகனத்தை காவல்துறையினர் மடக்கினர். அவரிடம் வாகனத்திற்கு உரிய ஆவணங்களும் இல்லை. இதனால் அவரது வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

 

இதையடுத்து மின்வாரிய அலுவலகம் சென்ற சைமன் நடந்த சம்பவத்தை உதவி மின் பொறியாளர் கோபாலசாமியிடம் தெரிவித்துள்ளார். இதைக் கேட்ட உதவி மின் பொறியாளர் உத்தரவிட்டதாக கூமாபட்டி காவல் நிலையத்திற்கு மற்றும் மின் இணைப்பை மின்வாரிய ஊழியர்கள் துண்டித்தனர்.

 

இதனால் 2 மணி நேரம் காவல் நிலையத்திற்கு மின்சாரம் இல்லாமல் போனது. 2 மணி நேரத்திற்குப் பிறகு காவல் நிலையத்திற்கு மின்சாரம் நியமிக்கப்பட்டது. வாகனத்தை பறிமுதல் செய்ததற்கு பழிவாங்கும் விதமாக காவல் நிலையத்திற்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது பற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கூமாபட்டி உதவி காவல் ஆய்வாளர் புகார் தெரிவித்துள்ளார். இதுபற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தி வருகிறார்.

Leave a Reply

Right Menu Icon