--- --:--:-- --

பரிசுப் பொருள், பணம் வழங்குவதை தடுக்க வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி

8

கோவை குனியமுத்தூர் இல்லத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். ஏற்கனவே முதல்கட்டமாக 43 பேர் கொண்ட பட்டியல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று இரண்டாம் கட்டமாக 27 வேட்பாளர்களின் பட்டியலை டாக்டர் கிருஷ்ணசாமி வெளியிட்டார்.

 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “வரும் 6 ம் தேதி அனைத்து வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கல் செய்ய இருக்கின்றோம். போட்டியிடும் தொகுதிகளில் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெறுவோம். தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தல் எவ்விதமான பாரபட்சம் இன்றி நடைபெற வேண்டும். அனுமதி கொடுப்பதில், மனு தாக்கலின் போது ஒரு சில அரசியல் கட்சிகளுக்கு முன்னுரிமை அளிப்பது கூடாது. மனு தாக்கல் செய்யும் போது இடையூறு இன்றி மனு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்காளர்களுக்கு பரிசு பொருள், பணம் வழங்குவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

 

21-ம் தேதி மாலை 6 மணிக்கு பின்பு பணப்பட்டுவாடா மிக அதிகமாக நடக்கும் நிலையில், நேர்மையாக, நியாமாக தேர்தல் நடைபெற வேண்டும். புதிய தமிழகம் கட்சியின் சார்பில் தேர்தல் அறிக்கை வரும் 3 ம் தேதி வெளியிடப்படும். புதிய தமிழகம் போட்டியிட்டு சில இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணியையும், சில இடங்களில் தி.மு.க-வையும் தோற்கடிப்போம். தேர்தல் களத்தில் எதிரிகளாக இருப்பவர்களை வெல்வோம்.

 

புதிய தமிழகத்திற்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் தொகுதிகள் குறித்த இப்போது சொல்ல முடியாது. தமிழகத்தில் வித்தியாசமான முறையில் புதிய தமிழகம் கடசி களமாடுவோம். புதிய தமிழகம் சார்பில் போட்டியிடும் 3-வது வேட்பாளர்கள் பட்டியலும் வரும். இன்னும் கூடுதலாக 10 தொகுதிகள் வரை போட்டியிட கூடும். வரும் 2 ம் தேதி மூன்றாவது கட்ட பட்டியலை வெளியிடுவோம்” என்றும் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

 

Leave a Reply

Right Menu Icon