--- --:--:-- --

உதவி ஆய்வாளர்களின் விரல் ரேகை பயிற்சி நிறைவு

2

தமிழக காவல் துறையில் தொழில்நுட்பம் மற்றும் விரல் ரேகை பிரிவின் உதவி ஆய்வாளர் பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. சென்னையை அடுத்த வண்டலூர் காவலர் பயிற்சி மைதானத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. தமிழ்நாடு காவல் உயர் பயிற்சி ரகத்தில் தொழில்நுட்ப பிரிவில் 268 உதவி ஆய்வாளர்களும் முதல்முறையாக திருநங்கை பிரிவு 179 உதவி ஆய்வாளர்கள் தங்கள் பயிற்சியினை முடித்தனர்.

 

பயிற்சியின்போது தொழில்நுட்ப முன்னேற்றம், குற்றவாளிகளை விரைந்து பிடிப்பது, மனித உரிமையை பாதுகாக்கும் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதனையொட்டி நடைபெற்ற பயிற்சி நிறைவு விழாவில் காவல்துறை தலைமை இயக்குனர் கலந்துகொண்டு அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார்.

Leave a Reply

Right Menu Icon