--- --:--:-- --

புல்வாமா பயங்கர வாத தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்களின் குடும்பத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிவாரண நிதியை வழங்கினார்

palanisamy-24-1503517768

கடந்த 14ம் தேதி பிப்ரவரி மாதம் காஷ்மீர் மாநிலத்திலுள்ள புல்வாமா பகுதியில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் அணிவகுப்பாக வந்து கொண்டிருந்த பொழுது தீவிரவாதிகளின் தாக்குதல் நடைபெற்றது. இதில் 44 வீரர்கள் மரணமடைந்தார்கள். மரணமடைந்த வீரர்களுக்கு பல்வேறு மாநிலத்தை சார்ந்தவர்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் அந்தந்த குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கி வருகிறது.

இன்று தமிழகத்தை சேர்ந்த 2 வீரர்களின் குடும்பத்திற்க்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த அந்த நிதி உதவியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சுப்ரமணியன்.அவர் ஒரு சி.ஆர்.பி.எஃப் வீரர். அதேபோல் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு வீரர் சிவச்சந்திரன்.

இவர்கள் இருவரது குடும்பத்திற்க்கும் அவர்களை நேரடியாக அழைத்து அவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் எடப்படி பழனிச்சாமி வருத்ததையும் தெரிவித்து கொண்டிருக்கிறார். இந்த குடும்பத்திற்க்கு தேவையான உத்தரவாத்த்தை கொடுத்தது மட்டுமில்லாமல் நிதி உதவியும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்த அறிக்கையில் சிவச்சந்திரனின் குடும்பம் தியாகம் செய்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

Leave a Reply

Right Menu Icon