--- --:--:-- --

அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாக வாய்ப்பு..!

10

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

இது தொடர்பாக மண்டல வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என தெரிவித்துள்ளது.

 

தரைக்காற்று வடமேற்கு திசை நோக்கி தமிழக பகுதி நோக்கி வீச சாத்தியக்கூறுகள் இருப்பதால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் ,ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, புதுச்சேரி, காரைக்கால் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரக்கூடும் என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அல்லது அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவாக்க வாய்ப்புள்ளதாகவும் அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகக் கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon