வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் 3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நீலகிரி, கோவை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.   திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நெல்லை, தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக […]

Read More

தமிழகத்தில் நாளை முதல் அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரொனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு தளர்வுகளுடன் வரும் 21ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.   இதனிடைய அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான இலவச பாடப்புத்தகங்கள் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அச்சடித்து முடிக்கப்படும் என 16 கோடி இலவச பாடப்புத்தகங்கள் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் அரசு நிதி உதவி […]

Read More

நடிகர் சிவகார்த்திகேயன் தனது புதிய வீட்டில் புதிதாக அமைத்துள்ள மாடித்தோட்டம் குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார் . ஊரடங்கு காலத்தில் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர்கள் தங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்து அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.   அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் கிழக்கு கடற்கரை சாலையில் புதிதாக கட்டியுள்ள தனது வீட்டின் மாடியில் தோட்டம் அமைத்து உள்ளார். தோட்டத்தில் உலாவிய வீடியோவை வெளியிட்டு வீடியோவில் அந்த தோட்டத்தில் இருந்து தான் தனது […]

Read More

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், சேலம், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களை தவிர பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் நாளை முதல் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல் படுத்தப்பட உள்ளது.   இதனால் பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் நாளை முதல் தேனீர் கடை காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. […]

Read More

பாலியல் புகாரில் சிக்கிய நீலகிரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சார்லஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப் பிரிவில் பணியாற்றி வந்த சார்லஸ்.   அங்கு பெண் காவலரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் சார்லஸ் மீதான குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பது தெரிய வந்தது.   அதன் அடிப்படையில் தற்போது நீலகிரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளராக […]

Read More

தமிழகத்திற்கு இன்று ஒரே நாளில் எட்டு லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. காலையில் ஒரு லட்சத்து இருபத்தைந்தாயிரம் கோவாக்சின் தடுப்பூசிகள் வந்துள்ளது. மாலையில் 7 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்துள்ளது.   மத்திய அரசு தொகுப்பில் இருந்து சுமார் 4 லட்சம் தடுப்பூசிகளும் தமிழக அரசு கொள்முதல் செய்த 4 லட்சம் தடுப்பூசிகளும் வந்தடைந்தன. பல்வேறு மாவட்டங்களுக்கு தடுப்பூசிகள் பிரித்து அனுப்பப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Read More

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரையை ஒட்டி உருவாகியிருக்கும்.   காற்றழுத்த தாழ்வு பகுதி அதே இடத்தில் நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   எனவே தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வானிலையே நிலவும் என்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய ஒரு […]

Read More

புதுச்சேரி சட்டப்பேரவை தலைவருக்கான தேர்தல் வரும் 16ம் தேதி நடைபெறும் என்று பேரவையின் செயலாளர் முனுசாமி அறிவித்திருக்கிறார். புதுச்சேரியின் 15வது சட்டப்பேரவை கூட்டம் வரும் புதன்கிழமை நடைபெறுகிறது.   சட்டப்பேரவை சபாநாயகர் தேர்தல் நடத்த புதுவை முதலமைச்சர் ரங்கசாமி அனுப்பிய கோப்பு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.   இந்த நிலையில் புதுவை சட்டப்பேரவை செயலாளர் முனுசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் பேரவை தலைவர் தேர்தலுக்கு வரும் 15ஆம் தேதி வரை வேட்பு மனுத்தாக்கல் நடைபெற […]

Read More

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தில் பயிற்சி பெற்றவர்கள் அடுத்த 100 நாட்களில் கோவில்களில் பணி அமர்த்தப்படுவர் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.   சென்னை நுங்கம்பாக்கம் அறநிலையத்துறை அலுவலகத்தில் ஆய்வு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் பெண்களும் அர்ச்சகர் ஆகலாம் என்றும் அதற்காக அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.   முதன்மையான கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என பதாகை வைத்த திட்டமிட்டுள்ளதாகவும் தமிழில் அர்ச்சனை செய்ய அர்ச்சகர்களுக்கு புத்தாக்க […]

Read More
1 2 3 1,413