நாய் ஒன்று உருண்டு பிரண்டு கதறிக் கொண்டு இருப்பதை பார்த்ததும் தக்க சமயத்தில் கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார் நபர் ஒருவர். தற்போது அந்த நாய் நலம் ஆகியுள்ளது. கொரொனா தொற்றால் மக்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.   இதனால் மாஸ்க் அணிந்து கொண்டுதான் மக்கள் சாலைகளில் சென்று வருகின்றனர். இதில் சிலர் தான் பயன்படுத்திய மாஸ்க்கை குப்பைத் தொட்டியில் போடாமல் அப்படியே சாலைகளில் வீசிவிட்டு செல்கின்றனர். […]

Read More

மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை கண்டித்து வரும் 18ஆம் தேதி நாடு முழுவதும் போராட்டம் நடத்த இந்திய மருத்துவ சங்கம் முடிவு செய்துள்ளது.   இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் நாடு முழுவதும் கொரொனா பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் பணியில் மருத்துவர்கள் ஈடுபடுள்ளதாக தெரிவித்தார். அதே நேரத்தில் மருத்துவர்கள் மீது தேவையற்ற தாக்குதல் நடத்தப்படுவதாக இந்திய மருத்துவர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.   அசாம், பீகார், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட […]

Read More

குஜராத்தில் ரயில் தண்டவாளத்தில் ஸ்கூட்டர் உடன் மாட்டிக் கொண்ட இளைஞர் கடைசி வினாடியில் தப்பிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.   ஜாம் நகரில் உள்ள சந்தியா பாலத்தின் அருகே தண்டவாளத்தில் ஆக்டிவா ஸ்கூட்டர் உடன் இளைஞர் ஒருவர் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். .   அப்போது எதிர்பாராதவிதமாக தண்டவாளத்தில் ஸ்கூட்டர் மாட்டிக் கொண்டுவிட கடைசிவரை ஸ்கூட்டரை நகர்த்த முடியாத இளைஞர் கைகாட்டி ரயிலை நிறுத்த முயற்சித்து விட்டு கடைசி வினாடியில் தப்பிக்கும் காட்சி […]

Read More

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கொரொனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களின் செல்போன் எண்கள் முடக்கப்படும் என அந்த மாகாண சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.   கொரொனா பரவலைத் தடுக்க ஒரே வழி தடுப்பூசிகள் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து வரும் சூழலில் கொரொனா தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள தயங்குகின்றனர்.   பஞ்சாபில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில் முதல் டோசை போட்டுக்கொண்ட சுமார் 3 லட்சம் பேர் இரண்டாம் டோசை போட்டுக்கொள்ள வரவில்லை என்று […]

Read More

கொரொனா தடுப்பூசியின் இரண்டு  டோஸ்களுக்கு இடையேயான கால இடைவெளியை நீட்டித்தால் தற்போது பரவும் மரபணு மாற்ற வைரஸால் மக்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும் என அமெரிக்க அதிபரின் மருத்துவ ஆலோசகரான டாக்டர் அந்தோணி எச்சரித்துள்ளார்.   தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இதை தெரிவித்தார். பிரிட்டனில் இப்படி இடைவெளியை அதிகரித்ததால் பலருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டது என்பதை சுட்டிக்காட்டினார். அதேநேரம் தடுப்பூசி தட்டுப்பாடாக இருந்தால் இடைவெளியை நீட்டிப்பது பற்றி பரிசீலிக்கலாம் எனவும் அவர் கூறினார்.   கடந்த […]

Read More

பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சரை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சந்தித்து பேசியுள்ளார். நரேந்திர மோடி கடந்த 2019 ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாக பதவியேற்ற பின் அமைச்சரவையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   இதற்கு மத்திய அமைச்சர்களை பிரதமர் தனித்தனியே சந்தித்து கடந்த இரண்டு ஆண்டுகளாக தம் துறைகளில் சாதித்தது குறித்து விசாரித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமரின் இல்லத்தில் இதுபோன்று மூன்று சந்திப்புகள் நிகழ்ந்ததாகவும் ஒவ்வொன்றும் ஐந்து மணி […]

Read More

கொரொனா பாதிப்புக்குள்ளான சில நோயாளிகளுக்கு செவித்திறன் இழப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. கொரொனா தொற்றில் இருந்து மீண்ட சிலர் காதுகளில் இரைச்சல் அல்லது விசில் போன்ற சத்தம் கேட்பதாக கூறி டெல்லி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.   டெல்லி அம்பேத்கர் மருத்துவமனைகளில் புள்ளிவிபரங்களின்படி கடந்த 2 மாதங்களில் காதுகேளாமை கோளாறினால் 15 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் பெருந்தொற்றில் இருந்து மீண்டவர்கள் என்பது தெரியவந்து உள்ளது.   எனவே பெருந்தொற்றில் இருந்து மீண்டவர்கள் காதுகளில் வலி […]

Read More

மும்பையில் நடிகர் ஷாருக்கானை அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சந்தித்து பேசினார். அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்து இருந்தார் பிரசாந்த் கிஷோர்.   அவருடன் ஷாருக்கான் தமது இல்லத்தில் விருந்து உபச்சாரம் செய்து கொண்டு 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பது அனுமானங்களை எழுப்பியுள்ளது.   பிரசாந்த் கிஷோரின் வாழ்க்கையை வெப்சீரிஸ் ஆக படமாக்கி அதில் ஷாரூக்கான் நடிக்க விரும்புவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இருவரும் நண்பர்கள் என்றும் இது […]

Read More

லட்சத்தீவுகளின் நிர்வாக அதிகாரியை கண்டித்து தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பேசியதற்காக இயக்குனர் ஆயிஷா சுல்தானா மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.   லட்சத்தீவுகளில் நிர்வாக அதிகாரி அறிவித்துள்ள சட்ட திருத்தங்களும் நடைமுறைகளும் மக்களிடையே எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் உணர்வுகள் பழக்க, வழக்கங்களுக்கு எதிராக திருத்தங்கள் கொண்டு வரப்படுவதாக இயக்குனர் ஆயிஷா தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்.   மலையாள தொலைக்காட்சி விவாதத்தில் ரபோல் பட்டேலை லட்சத்து மக்களுக்கு எதிரான ஆயுதமாக மத்திய அரசு பயன்படுத்துவதாக […]

Read More
1 2 3 479