அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு! திருப்பூரில் பரபரப்பு!!

திருப்பூர் பல்லடத்தில் அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு, பரபரப்பு மின் மயானம் அமைக்க வலியுறுத்தி முழு அடைப்பில் ஈடுபட்டு வரும் ஏப்ரல் 18 நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து வரும் நிலையில் மதுரையிலிருந்து கோவை நோக்கி 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று

கொண்டிருந்த அரசு பேருந்தை இரு சக்கர வாகனத்தில் எதிரே வந்த மர்ம நபர் ஒருவர் கல்லால் தாக்கியதாக வும் இதனால் கண்ணாடி உடைந்து கட்டுப்பாட்டை இழப்பதற்கு முன் உடனடியாக ஓட்டுநர் மதுரையை சேர்ந்த சிவா பேருந்தை நிறுத்தி பயணிகளை மாற்று பேருந்தில் ஏற்றி விட்டு பல்லடம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை,


ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 792 வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா மூலம் கண்காணிப்பு: கலெக்டர் தகவல்

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில், வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடி மையங்களை வெப் கேமரா மூலம் கண்காணிப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு கள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

 

இதில் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் கூறியதாவது: ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல், பரமக்குடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவிற்கு அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

ராமநாதபுரம் நாடாளுமன்ற  தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் 1,916 வாக்குச்சாவடி மையங்கள், பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் 302 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. மக்கள் அச்சமுமின்றி சுதந்திரமாக வாக்களிக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.

 

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் 792 வாக்குச்சாவடி மையங்கள் தேர்வு செய்யப்பட்டு வெப்கேமரா மூலம் கண்காணிக்கப்படவுள்ளது. ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில்  பதற்றமான வாக்குச்சாவடி மையங்களாக கண்டறியப்பட்டுள்ள 140 வாக்குச்சாவடி மையங்கள், இதில் அடங்கும் என்றார்.

 

இக்கூட்டத்தில் தேசிய தகவல் மையம் அலுவலர் (பொ) பழனிவேல்ராஜா, உதவி மகளிர் திட்ட அலுவலர்  விக்னேஷ்வரன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

-மகேந்திரன், ராமநாதபுரம்.


பொள்ளாச்சியில் அரங்கேறிய மற்றொரு அதிர்ச்சி சம்பவம்! 9 வயது சிறுமியை சீரழித்த வளர்ப்பு தந்தை

பொள்ளாச்சி அருகே, ஒன்பது வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வளர்ப்பு தந்தை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

 

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கொள்ளுப்பாளையம் பகுதியில் இயங்கும் அரசு பள்ளியில்,  9 வயது சிறுமி ஒருவர் படித்து வருகிறார். நேற்று வழக்கம்போல் பள்ளிக்குச் சென்ற சிறுமி, வகுப்பறையில் மிகவும் சோர்வாக காணப்பட்டார்.

 

இது குறித்து பள்ளி ஆசிரியை அந்த மாணவியிடம் விசாரித்துள்ளார். அப்போது, வளர்ப்பு தந்தையே அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

 

இதையடுத்து பள்ளி நிர்வாகத்தினர், உடனடியாக கோவை குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு புகார் அளித்தனர். மேலும் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது.

 

விசாரணை நடத்திய மகளிர் காவல் நிலைய போலீசார், சிறுமியின் வளர்ப்பு தந்தை பரமன் என்கிற பரமசிவம் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். தொப்பம்பட்டி பேருந்து நிறுத்ததில் நின்று கொண்டிருந்த பரமசிவத்தை கைது செய்த விசாரித்தனர். பின்னர்,கோ வை ஜே.எம்.5 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

 

ஏற்கெனவே, பொள்ளாச்சியில் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளை ஒரு கும்பல் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் நாட்டையே  உலுக்கியது. தற்போது வளர்ப்பு தந்தையே மகளை  வன்கொடுமை செய்த சம்பவம், அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


பி.எம். நரேந்திரமோடி சினிமாவுக்கு தடை! தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

பிரதமர் நரேந்திரமோடியின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் ‘பி.எம். நரேந்திரமோடி’ என்ற திரைப்படத்தை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்தது.

 

ஓமங்க் குமார் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் மோடி வேடத்தில் நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளார்.  மோடியின் இளமை காலத்து வாழ்க்கையில் இருந்து, பிரதமர் ஆனது வரை உள்ள சம்பவங்கள், அவரது அரசின் திட்டங்கள் உள்ளிட்டவை இப்படத்தில் இடம் பெற்றுள்ளன.

 

இப்படத்தை தேர்தல் நேரத்தில் வெளியிட்டால், தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தி பா.ஜனதாவுக்கு ஆதரவு அலை உருவாகும் என்று எதிர்ப்பு கிளம்பியது. படத்தை வெளியிடக் கூடாது என்று தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், ஓய்வு பெற்ற 47 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் என பலரும் புகார் அளித்தனர்.

இதையடுத்து, நேரில் விளக்கம் அளிக்கும்படி மோடி படத்தின் தயாரிப்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி, மோடியாக நடித்த விவேக் ஓபராய், தயாரிப்பாளர் சந்தீப் சிங் ஆகியோர் தேர்தல்  அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் தந்தனர்.

 

இதற்கிடையே, இப்படம் வெளியிட தடை கேட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்விவகாரத்தில் தேர்தல் ஆணையம்தா ன் முடிவு எடுக்கும் என மும்பை உயர்நீதிமன்றம், மற்றும் உச்சநீதிமன்றம் ஆகியன தெரிவித்தன.

 

இந்நிலையில், மோடியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை தேர்தல் முடியும் வரையில் வெளியிடக்கூடாது  என்று, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதேபோல், என்.டி.ஆர்.லட்சுமி, கே.சி.ஆர். குறித்த திரைப்படங்களுக்கும்  தடை விதிக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


பா.ம.க.வில் இருந்து முக்கிய நிர்வாகி ‘ஜூட்’! தேர்தல் நேரத்தில் ராமதாஸ், அன்புமணிக்கு ‘ஷாக்’

பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து விலகுவதாக, அந்த கட்சியில் மாநில துணை தலைவர் பொங்கலூர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பா.ம.க. வெளியில் இருந்து பார்த்தால் பிரமிப்பாக இருந்தது. ஆனால், உள்ளே போய்  பார்த்தால் தான் ஒன்றுமில்லை என்று தெரிகிறது. வன்னியர் சமுதாயத்தையும்,  பிற சமுதாயத்தையும்  அந்த கட்சி தலைமை அடகு வைத்துவிட்டது.

 

 

மக்களவை தேர்தலில் 7 தொகுதிகளில் பாமக போட்டியிடுகிறது. திண்டுக்கல் தொகுதியின் பொறுப்பாளராக என்னை நியமித்தார்கள்.  ஆனால், அங்கு மட்டுமின்றி எல்லா தொகுதிக்கும் நான் பிரசாரத்திற்கு சென்றபோது, மக்கள் மோசமாக பேசினார்கள். அது பொறுக்காமல் இப்போது விலகுகிறேன்.

 

பொதுவாக பாமகவின் அறிக்கை, மறியல், போராட்டம் எல்லாவற்றிற்கும் பின்னால் ஒரு பேரம் இருக்கும் என்பதை தாமதமாக உணர்ந்து கொண்டேன் என்றார்.

 

மக்களவை தேர்தல் நேரத்தில் முக்கிய நிர்வாகி விலகியிருப்பது ராமதாஸ் மற்றும் அன்புமணியை அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது. சமீபத்தில் பா.ம.க.வில் இருந்து விலகிய நடிகர் ரஞ்சித், டிடிவி தினகரனின் அ.ம.மு.க.வில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.


அமேதி தொகுதில் மனு தாக்கல் செய்தார் ராகுல்! திறந்த வாகனத்தில் 3 கி.மீ. ஆரவாரமாக ஊர்வலம்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

 

நாட்டின் 17-வது மக்களவைக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரப் பிரதேசத்தில் உள்ள அமேதி மற்றும் கேரளாவில் உள்ள வயநாடு ஆகிய இரணு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதில், வயநாடு தொகுதியில் கடந்த 4ஆ ம் தேதி ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார்.

 

இந்நிலையில், அமேதி தொகுதியில் போட்டியிடுவதற்காக அவர், இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். உடன் சோனியா காந்தி, சகோதரி பிரியங்கா காந்தி, மைத்துனர் ராபர்ட் வதேரா ஆகியோர் இருந்தனர்.

 

முன்னதாக, அமேதியின் முன்ஷிகன்ஜ்-தர்பிபூர் முதல் கௌரிகஞ்ச் வரை 3 கி.மீ.தொலைவிற்கு திறந்த வாகனத்தில் ராகுல் ஊர்வலமாக வந்தார். அமேதி தொகுதியில் பாஜக சார்பில் ஸ்மிருதி இரானி  நிறுத்தப்பட்டுள்ளார். அமேதி தொகுதியில், மே 6ஆம் தேதி தேர்த்ல வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

 


பொள்ளாச்சி விவகாரம்: ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தது சிபிசிஐடி

பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

 

இளம்பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இளம்பெண்களை ஒரு கும்பல் பலாத்காரம் செய்து மிரட்டிய சம்பவம் தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

 

பெண்களை சமூக வலைத்தளங்கள் மூலம் காதல் வலையில் விழவைத்து, கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்து, பணம் பறித்து கொடூரங்களை நிகழ்த்தினர்.இதுதொடர்பாக சபரிராஜன் (25) திருநாவுக்கரசு (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27) ஆகியோரை பொள்ளாச்சி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தநிலையில், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

 

சி.பி.சி.ஐ.டி. போலீசார் கோவையில் முகாமிட்டு தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.இந்த வழக்கின் விசாரணையில் தெரியவந்த விபரங்களை அறிக்கையாக தயாரித்து, சீலிட்ட உறையிலிட்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சென்னை ஐகோர்ட்டில் இன்று தாக்கல் செய்தனர்.

 

பெண்களை ஒரு கும்பல் பலாத்காரம் செய்து மிரட்டிய சம்பவம் தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பெண்களை சமூக வலைத்தளங்கள் மூலம் காதல் வலையில் விழவைத்து, கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்து, பணம் பறித்து கொடூரங்களை நிகழ்த்தினர்.

 

இதுதொடர்பாக சபரிராஜன் (25) திருநாவுக்கரசு (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27) ஆகியோரை பொள்ளாச்சி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தநிலையில், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் கோவையில் முகாமிட்டு தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கின் விசாரணையில் தெரியவந்த விபரங்களை அறிக்கையாக தயாரித்து, சீலிட்ட உறையிலிட்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சென்னை ஐகோர்ட்டில் இன்று தாக்கல் செய்தனர்.

ஈயம் பூசின மாதிரியும் இருக்கணும்; பூசாத மாதிரியும் இருக்கணும்! ரஜினி ‘வாய்ஸ்’ பின்னணியில் யார்?

சென்னை: தேர்தல் நேரத்தில் அரசியல் பேசவேண்டாம் என்று கூறிய ரஜினி, நதிநீர் இணைப்பு பற்றிய பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை மட்டும் பாராட்டி பேசியதன் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். இருப்பதாக பேச்சு நிலவுகிறது.

 

நடிகர் ரஜினியின் தர்பார் படம் குறித்த அறிவிப்பும், போஸ்டரும் நேற்று வெளியாகி, சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆனது. அதன் படப்பிடிப்பு மும்பையில் இன்று தொடங்குகிறது. இதற்காக சென்னையில் இருந்து மும்பைக்கு ரஜினி புறப்பட்டு சென்றார்.

 

 

அதற்கு முன்பாக செய்தியாளர்களை நேற்று சந்தித்த அவர், பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் நதிநீர் இணைப்பு பற்றி குறிப்பிட்டதை வரவேற்பதாக கூறினார். மத்தியில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்த திட்டத்தை முதலில் நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். அரசியல் பற்றி நிருபர்கள் கேட்டபோது, இது தேர்தல் நேரம் என்பதால் அரசியல் பேசவிரும்பவில்லை என்று கூறி, தவிர்த்தார்.

 

பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையை ஆதரித்ததன் மூலம் தனது அரசியல் நிலைப்பாட்டை மறைமுகமாக தனது ரசிகர்களுக்கு அவர் உணர்த்தியிருப்பதாகவே தெரிகிறது. ஏனெனில், எந்த கட்சி நதிநீர் இணைப்புக்கு முன்னுரிமை தருகிறதோ அதை ஆதரியுங்கள் என்று அவர் ஏற்கனவே கூறியிருந்தார்.

 

எனினும் நேரடியாக பா.ஜ.க. அணிக்கு அவர் ஆதரவு தெரிவிக்கவில்லை. இதன் மூலம், வழக்கம் போல் பட்டும் படாமல் தனது நிலைப்பாட்டை அவர் சூசகமாக தெரிவித்து இருப்பது, சினிமாவில் வரும் கவுண்டமணியில் “ஈயம் பூசின மாதிரியும் இருக்கணும்; பூசாத மாதிரியும் இருக்கணும்” என்ற வசனத்தை நினைவு படுத்துவதாகவே உள்ளதாக, பலரும் பேசிக் கொள்கிறார்கள்.

 

இதற்கிடையே, ரஜினியின் இந்த அறிவிப்புக்கு பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அமீத் ஷா ஆகியோர் இருப்பதாக, அரசியல் வட்டாரத்தில் மற்றொரு பேச்சு நிலவுகிறது. அதனால் தான், படப்பிடிப்புக்கு செல்லும் முன் தனது அரசியல் நிலைப்பாட்டை மறைமுகமாக சொல்லிவிட்டு புறப்பட்டிருக்கிறார் என்று, அவர்கள் கூறுகின்றனர்.


அதிமுக அரசுக்கு காத்திருக்கும் பேராபத்து! ஆட்சியை தக்க வைக்க கிடைக்குமா ‘பத்து”?

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்துவதாக மே தேர்தல் ஆணையம் அறிவித்ததால், அதில் 10 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை காப்பாற்ற வேண்டிய கட்டாயம், அதிமுக அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இது, அக்கட்சியினர் மத்தியில் கலக்கத்தை ற்படுத்தியுள்ளது.

 

கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. 136 இடங்களில் வெற்றி பெற்று அரியணையில் அமர்ந்தது. ஜெயலலிதா திடீர் மறைவுக்கு பின் அ.தி.மு.க. சட்டசபை எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக  குறைய தொடங்கியது.

 

ஆர்.கே.நகரில் சுயேச்சை வேட்பாளர் தினகரன் வெற்றி பெற்றதும்,  அவரது அணிக்கு தாவிய 18  அ.தி.மு.க. – எம்எல்ஏக்கள் களமிறங்க்க் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, அந்த தொகுதிகள் காலியாக அறிவிக்கப்பட்டது.

 

அதேபோல் கருணாநிதி, போஸ்ஆகியோரின் மறைவால் திருவாரூர், திருப்பரங்குன்றம்  தொகுதிகள் காலியாகின. குற்ற வழக்கில் சிறை தண்டனை பெற்றதால் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி பதவி இழந்து, ஓசூர் தொகுதியும் காலியாக உள்ளது.

 

 

இதற்கிடையே மக்களவை தேர்தல் அட்டவணையை வெளியிட்ட தேர்தல் ஆணையம், வழக்கு நிலுவையில் இருந்ததால், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் சட்டசபை தொகுதிகளை தவிர்த்து, 18 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்துவதாக அறிவித்தது.

 

 

ஆனால், சூலூர் உட்பட எஞ்சிய நான்கு சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று, அரசியல் கட்சிகள் வரிந்து கட்டி கோரிக்கை விடுத்தன. இதை ஏற்று, தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், இந்த நான்கு தொகுதிகளுக்கும் மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் என்றது. இது எதிர்க்கட்சியினர் மத்தியில் உற்சாகத்தையும், ஆளும் கட்சியினர் மத்தியில் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது

 

ஆளுங்கட்சியின் கவலைக்கு காரணம் இதுதான்

 

சட்டசபையில் தற்போது அ.தி.மு.க.வின் பலம், 114.  இதில் கலைச்செல்வன் (விருத்தாசலம் எம்.எல்.ஏ.), ரத்தினசபாபதி (அறந்தாங்கி), பிரபு (கள்ளக்குறிச்சி) ஆகியோர் தினகரன் ஆதரவாளர்களாக மாறினர். அதேபோல் அதிமுக சின்னத்தில் வெற்றி பெற்ற தனியரசு; தமிமுன் அன்சாரி; கருணாஸ் ஆகியோரும் அ.தி.மு.க.விற்கு எதிராகவே உள்ளனர். இதனால் அ.தி.மு.க.வின் தற்போதைய பலம் 108 என்று குறைந்துள்ளது.

 


இதனால், அதிமுக அரசு சட்டசபை தனிப்பெரும்பான்மையுடன் கவலையில்லாமல் ஆட்சியை தொடர, இன்னும் 10 தொகுதிகளில் வெற்றி பெற்றாக வேண்டும். இல்லையெனில், ஒன்றிரண்டு எம்.எல்.ஏ.க்கள் அணி மாறினாலும் ஆட்சி கவிழும் ஆபத்து உள்ளது.

 

தி.மு.க. கூட்டணிக்கு தற்போது 97 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அந்த கூட்டணி 21 இடங்களில் வெற்றி பெற்றால், ஆட்சியமைக்க வாய்ப்புள்ளது. எனவே, எப்படியும் 10 இடங்களில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில், அதிமுக அரசு உள்ளது.

 

எப்படியும் இடைத்தேர்தல் நடகும் 22 தொகுதிகளில் குறைந்தபட்சம் 10 இடங்களில் வென்றாக வேண்டிய கட்டாயம், அதிமுக அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இதுவரை வெளிவந்துள்ள கருத்து கணிப்புகள் பலவும் திமுகவுக்கு சாதகமாக இருப்பதால், வெற்றி வசப்படுமா என்ற கவலை அதிமுகவினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இது அவர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது. இதற்கெல்லாம் விடை, மே 23இல் தெரியும்.