--- --:--:-- --

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி – நாளை மழை வெளுக்கும்

2

கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு அதிகாலையில் பனிமூட்டம் நிலவும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதான வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

எனினும், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை, நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் 3 நாட்களுக்கு அதிகாலை வேளையில் பனிமூட்டம் நிலவும் என்றும் தெரிவித்துள்ளது.

 

மேலும், தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் நாளை லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், தென் தமிழக மற்றும் வடதமிழக கடலோர மாவட்டங்களில் நாளை மறுநாள் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது.

 

சென்னை மற்றும் புறநகரில், இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கக் கூடும் என கணித்துள்ளது. குமரிக்கடல் பகுதிகளை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் நாளை மற்றும் நாளை மறுநாள் 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Right Menu Icon