அதிமுக முன்னாள் கவுன்சிலர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் குஷ்பூ உடன் பரப்புரையில் ஈடுபட்டு வரும் அதிமுக முன்னாள் கவுன்சிலர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அதிமுகவின் முன்னாள் கவுன்சிலர் சின்னையன் என்ற ஆறுமுகத்திற்கு சொந்தமாக தியாகராயநகரில் உள்ள வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடைபெற்றது. வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய பணம் பதுக்கி வைத்திருப்பதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஓராண்டாக சென்னையின் வங்கி கணக்கில் பணப் பரிவர்த்தனை வருமான வரி கணக்கு தாக்கல் உள்ளிட்ட ஆவணங்கள் குறித்து சோதனை தொடர்பான விசாரணை நடைபெற்றது.
அப்போது சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு அவருக்கு சம்மன் கொடுத்திருப்பதாகவும் வருமானவரித்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதனிடையே சோதனையில் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை என கூறியுள்ளார்.






