சீமானுடன் நடிகர் விஜய் கூட்டணியா..?
தமிழக வெற்றி கழகம், நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி வைக்குமா என்பதை விஜய் அறிவிப்பார் என்று தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்லி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் தமிழக வெற்றிக்கழகத்தின் மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்த பேசிய அவர் 2026 சட்டமன்றத் தேர்தல் தான் தமிழக வெற்றி கழகத்தின் இலக்கு என்றும் ஒவ்வொரு தொண்டனும் அயராது உழைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.





