--- --:--:-- --

விபத்தில் சிக்கிய மூதாட்டி! தனது காரிலேயே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற மாவட்ட ஆட்சியர்

2

சிவகங்கை அருகே சாலை விபத்தில் சிக்கிய மூதாட்டியை தனது காரில் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த மாவட்ட ஆட்சியரின் செயல்பாட்டுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

 

சிவகங்கை மாவட்டம் கீழக்கண்டனி கிராமத்தை சேர்ந்தவர் அள்ளி. 75 வயதான இவர் சாலையை கடக்க முயன்ற போது டிராக்டர் மோதியதில் காயமடைந்து நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது அவ்வழியாக வந்த மாவட்ட ஆட்சியர் தனது காரை நிறுத்தி சாலையில் விபத்துக்குள்ளான மூதாட்டியை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தார்.

 

அங்கு மூதாட்டிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனிடைய மூதாட்டியை மீட்டு மருத்துவமனைக்கு மாவட்ட ஆட்சியர் அழைத்துச்செல்லும் வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Leave a Reply

Right Menu Icon