--- --:--:-- --

தகாத உறவில் இருந்த பெண்.. கள்ளக்காதலுடன் ஏற்பட்ட மோதல்..!

9

ர்வாடி அருகே தகாத உறவில் இருந்த காதலர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் இளைஞர் கழுத்துறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

ஏர்வாடி அருகே கீழூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த இந்திராவுக்கு திருமணம் ஆகி இரண்டு மகன்கள் உள்ள நிலையில் கணவனின் உறவினரான பிரவீன் ராஜ் என்பவருடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது.

 

இது இரண்டு ஆத்திரமடைந்த இந்திராவின் கணவர் அவரை பிரிந்து சென்ற நிலையில் பிரவீன் ராஜுடன் இந்திரா வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பிரவீன் ராஜுக்கும், இந்திராவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் பிரவீன் ராஜை வெளியே தள்ளி இந்திரா கதவை சாத்தியதாகவும் கூறப்படுகிறது.

 

இதனால் ஆத்திரமடைந்த பிரவீன் ராஜ் வீட்டின் முன்பு கழுத்து அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் பிரவீன் ராஜை மீட்டு அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

 

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon