--- --:--:-- --

பள்ளி வகுப்பறைக்குள் துப்பாக்கியுடன் நுழைந்து மிரட்டிய நபர்..!

3

மேற்குவங்க மாநிலத்தில் பள்ளி வகுப்பறைக்குள் துப்பாக்கியுடன் நுழைந்து மாணவர்களை கொல்லப் போவதாக மிரட்டிய சம்பவம் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

 

மால்டா மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்குள் நுழைந்து அடையாளம் தெரியாத நபர் எட்டாம் வகுப்பு வகுப்பறைகள் புகுந்து துப்பாக்கியால் அங்கிருந்த மாணவர்களையும் ஆசிரியர்களையும் மிரட்டியுள்ளார். இதனால் செய்வதறியாமல் ஆசிரியர்களும், மாணவர்களும் அச்சத்தில் இருந்தனர்.

 

இது பற்றி தகவல் அறிந்ததும் பள்ளிக்கு விரைந்து வந்த காவலர்கள் துப்பாக்கியுடன் வந்த நபரை சுற்றி வளைத்து கைது செய்தனர். காவல்துறையினர் மேற்கொண்ட துரித நடவடிக்கையால் அசம்பாவிதம் நிகழ்ந்தது தவிர்க்கப்பட்டது.

 

எனினும் துப்பாக்கியுடன் வகுப்பறைக்குள் நுழைந்த சம்பவம் மேற்குவங்க மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

 

Right Menu Icon