கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து..!
வாலாஜாபேட்டை அடுத்த பகுதியில் சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்றிருந்த கண்டெய்னர் லாரியின் பின்புறத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் பெண் உள்ளிட்ட மூன்று பேர் உயிரிழந்தனர்.
பழுதான சாலையில் நின்ற கண்டெய்னர் லாரியின் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பெண் உள்ளிட்ட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.





