--- --:--:-- --

விஜயகாந்த் நலம்பெற்று வீடு திரும்ப வேண்டும்..!

9

ருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கேப்டன் விஜயகாந்த் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வர வேண்டும் என்று முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

நீண்ட ஆண்டுகளாக இருக்கும் நீரிழிவு பிரச்சனையால் அவதிப்பட்டு வரும் நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் வலது காலில் உள்ள விர ல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மருத்துவரின் ஆலோசனைப்படி விரல் அகற்றப்பட்டதாக தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மருத்துவர்களின் கண்காணிப்பில் விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார் எனவும் சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் எனவும் குறிப்பிட்டுள்ளது.

 

முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் எனது அருமை நண்பர் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் விரைவில் நலம் பெற்று நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

Right Menu Icon