ஆர்ஆர்ஆர் படத்தின் படக்குழு வெளியிட்டுள்ள அப்டேட்..!
பாகுபலி பட இயக்குனர் ராஜமவுலி இயக்கி வரும் ஆர் ஆர் ஆர் படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி வரும் இந்த படம் சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கோமரம்பி ஆகியோரின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட வருகிறது. கொரொனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு கடந்த வாரம் மீண்டும் தொடங்கியுள்ளது.
ஆர்ஆர்ஆர் படத்தின் புதிய போஸ்டர் பகிர்ந்துள்ள படக்குழு இரண்டு பாடல் காட்சிகளை தவிர்த்து இதர காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






