ரயில் பயணிகளின் கவனத்திற்கு ராமேஸ்வரம் செல்லும் ரயில்கள் மண்டபம் ரயில் நிலையத்தோடு நிறுத்தம் தெற்கு ரயில்வே அறிவிப்பு
பாம்பன் கடல் பாலத்தில் நடைபெறும் பணிகள் காரணமாக ராமேஸ்வரம் செல்லும் சிறப்பு ரயில்கள் மண்டபம் ரயில் நிலையத்தோடு நிறுத்தப்படும். ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் ரயில்கள், அதற்கு பதிலாக மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.
02205/06 சென்னை எழும்பூர்- ராமேஸ்வரம் ‘சேது’ சிறப்பு ரயில் இனி மண்டபம் ரயில் நிலையத்தோடு நிறுத்தப்படும் மற்றும் மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.

02205/06 சென்னை எழும்பூர்- மண்டபம்- சென்னை எழும்பூர் சிறப்பு விரைவு வண்டி
இந்த நடைமுறை மறு உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







