--- --:--:-- --

டிரம்பை விமர்சனம் செய்து சீனா வெளியிட்ட வீடியோ..!

12

கொரொனா வைரஸ் பரவலுக்கு சீனா மீது பழி சுமத்தும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை கேலி செய்யும் வீடியோவை சீன அரசு தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

 

அதில் கொரொனா பரவலை கட்டுப்படுத்த சீனா மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கைகளை மனித உரிமை மீறல்களாக விமர்சித்த அமெரிக்காவில் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றனவா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

 

மேலும் கொரொனா வைரஸ் பரவல் குறித்து ஆரம்பத்தில் விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளை உதாசீனப்படுத்தியதால் அமெரிக்காவில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

 

இருந்தபோதும் டிரம்ப் கடைசிவரை தான் செய்த தவறுகளுக்கு சீனா உலக சுகாதார மையம் மற்றும் முன்னாள் அதிபர் ஒபாமா மீது குற்றம் சுமத்தி வருவதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon