ஏழை- எளிய மக்களுக்கு உதவ தினமும் 20கி.மீ. பயணிக்கும் பெண் எம்எல்ஏ!
தெலுங்கானா மாநிலத்தில் பெண் எம்எல்ஏ ஒருவர் தனது தொகுதியில் கொரொனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்க தினமும் 20 கிலோமீட்டர் தூரம் பயணம் மேற்கொண்டுள்ளார். மாவோயிஸ்ட் ஆக இருந்து பின்னர் முளுகு தொகுதி எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சித்தக்கா.
அவர் கொரொனா பாதிப்பை முன்னிட்டு பசியை விரட்டுவோம் என்ற இயக்கத்தை தொடங்கிய இவர் கடந்த 40 நாட்களாக மலைவாழ் பழங்குடியினர் உள்ளிட்ட ஏழை மக்களுக்கு அரிசி, மளிகை, காய்கறி உள்ளிட்ட பொருட்களை தலையில் சுமந்து சென்று வழங்கி வருகிறார். டிராக்டரிலும் இரு சக்கர வாகனங்களிலும் கரடுமுரடான மற்றும் மலைப் பாதைகளில் நடந்து சென்றும் உதவிப் பொருட்களை விநியோகித்து வருகிறார்.







