தமிழகத்தில் 99.27% எஸ்.ஐ.ஆர் படிவங்கள் பதிவேற்றம்..!

மிழகத்தில் 99.27% எஸ்.ஐ.ஆர் படிவங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நவ. 4-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

 

அதன்படி தமிழகத்தில் இதுவரை 99.91% (6,40,59,971 பேர்) எஸ்ஐஆர் படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 99.27% (6,36,44,038 பேர்) பதிவேற்றம் செய்துள்ளதாகவும் இந்திய தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

 

எஸ்ஐஆர் படிவங்களைப் பெற்றுக்கொண்ட வாக்காளர்கள் தங்கள் படிவங்களை பூர்த்தி செய்து, வரும் டிச. 11-ஆம் தேதி வரை பிஎல்ஓ-க்கள் அல்லது வாக்காளா் உதவி மையத்தில் சமர்ப்பிக்கலாம்.