தூத்துக்குடி மாவட்டத்தில் ஃபிரிட்ஜ் வெடித்து விபத்து..!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் மீனாட்சிபுரம் நடுத்தெருவை சேர்ந்த முனியசாமி என்பவரின் வீட்டில் ஃப்ரிட்ஜ் வெடித்து சிதறியதில் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

 

ஃபிரிட்ஜ் மீது மெழுகு வர்த்தியை ஏற்றி வைத்ததால் அதன் மூலம் தீப்பற்றி வெடித்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.