தெரு நாய் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது; “தமிழ்நாட்டில் 138 கால்நடை மருத்துவமனைகள் மூலம் நாய்களுக்கு கருத்தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் கூடுதலாக 88 மையங்கள் உருவாக்கப்பட்டன.
சென்னை மாநகராட்சியில் மட்டும் 5 கருத்தடை மையங்கள் செயல்படுகின்றன. மற்ற 25 மாநகராட்சிகளில் 86 கருத்தடை மையங்கள் செயல்படுகின்றன. நாய்கள் கருத்தடை திட்டத்திற்காக 450 கால்நடை மருத்துவர்களுக்கு 15 நாள் சிறப்பு பயிற்சி தரப்பட்டுள்ளது. இதுவரை 4.77 லட்சம் ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளன.” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள் :
3 மாதங்களில் ஒரு லட்சம் நாய்களுக்கு தடுப்பூசி- சென்னை மாநகராட்சி தகவல்
நவ. 1 முதல் 3 புதிய விதிமுறைகள்!
அக்டோபர் மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.95 லட்சம் கோடி - மத்திய அரசு
வெங்கடேஷ்வரா சுவாமி கோவில் கூட்ட நெரிசிலில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு.
எல்விஎம்-3 ராக்கெட் வெற்றி பெற வேண்டி இஸ்ரோ தலைவர் திருப்பதியில் சாமி தரிசனம்
நவம்பர் முதல் புதிய மாற்றங்கள்..!






