வெங்கடேஷ்வரா சுவாமி கோவில் கூட்ட நெரிசிலில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு.

ந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள வெங்கடேஸ்வர ஸ்வாமி கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆந்தராவில் தற்போது கார்த்திகை மாதம் என்பதால் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

 

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாக்குளம் மாவட்டத்தில் உள்ள காசிபுக்க வெங்கடேஸ்வரா சாமி கோவிலுக்கு இன்று அளவுக்கு அதிகமான பக்தர்கள் சாமி கும்பிடுவதற்காக வந்திருந்தனர்.

 

அப்போது கோவிலுக்கு செல்வதற்காக பக்தர்களிடையே கூட்ட நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் பலர் கீழே விழுந்து நெரிசலில் சிக்கி மிதிபட்டு படுகாயம் அடைந்தனர். அவர்களின் 9 பேர் மரணம் அடைந்து விட்ட நிலையில் மேலும் பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

சிகிச்சை பெறுபவர்களில் சிலருடைய உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது.