இசையமைப்பாளர் மகனுக்கு ஜோடியா ருக்மிணி வசந்த்..!

டிகை ருக்மிணி வசந்த் தற்போது சென்சேஷன் நடிகையாக மாறி இருக்கிறார். காந்தாரா 2 படத்தின் பிரம்மாண்ட வெற்றி தான் அதற்கு காரணம். தமிழில் அவர் சமீபத்தில் சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தார்.

 

தற்போது பிரபல இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன் ஹர்ஷவர்தன் ஹீரோவாக அறிமுகம் ஆகும் படத்தை லிங்குசாமி இயக்குகிறார்.அந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க ருக்மிணி வசந்த் ஒப்பந்தம் ஆகி இருக்கிறாராம். விரைவில் இலங்கையில் ஷூட்டிங் தொடங்குகிறதாம்.

 

ருக்மிணி வசந்த்தை விட ஹர்ஷவர்தன் மூன்று வயது குறைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.