திருப்பதியில் தொழுகை செய்த தமிழர்..!

திருப்பதி திருமலை கோயிலின் கல்யாண வேதிகா மண்டபம் அருகே ஒருவர் சுமார் 10 நிமிடங்கள் தொழுகை செய்துள்ளார். திருமலையில் பிற மத வழிபாடுகள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து போலீஸார் விசாரித்தனர்.

 

இதில் அவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு திருமலையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுகுறித்து விசாரணை நடைபெறுகிறது.