பாமக தலைவராக தொடர்கிறேன்: அன்புமணி

ராமதாஸின் கனவை நிறைவேற்ற பாமகவின் தலைவராகத் தொடர்வதாக அன்புமணி தெரிவித்துள்ளார். தந்தை மகன் இடையே மோதல் போக்கு நிலவி வருவதாக கூறப்படும் நிலையில், எதிரிகள் பாமகவுக்கு எதிராக சூழ்ச்சி செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

 

இதுநாள் வரை ராமதாஸ் கூறியதை செய்து வந்ததாக உருக்கமாக பேசிய அவர், ஒரு மாதமாகத் தூக்கமின்றி மன உளைச்சலில் இருப்பதாக வேதனையுடன் கூறியுள்ளார்.