கேரளாவைச் சேர்ந்த பெண், தனது மகள் (3) பஸ்ஸில் வீட்டுக்குச் செல்லும்போது காணாமல் போனதாக புகாரளித்தார். தாயிடம் சந்தேகம் கொண்ட போலீஸ், அவரிடம் விசாரணை செய்ததில், மகளை ஆற்றில் வீசியதாக கூற, சிறுமியின் உடல் மீட்கப்பட்டு உடற்கூறாய்வு செய்யப்பட்டது.
இதில் சிறுமி பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது தெரியவந்தது. தற்போது, சந்தேகத்தின்பேரில் சிறுமியின் சித்தப்பாவை போலீஸ் கைது செய்துள்ளது.