திருப்பூரில் அப்பாவி ஆண்களை மயக்கி காசு பறிக்கும் மோசடி ராணியால், பல குடும்பங்கள் சீரழியும் ஆபத்து உள்ளது. சொந்த மகளின் குடும்பத்தை சிதைத்து, மற்ற ஆண்களின் குடும்பத்தை நடுத்தெருவுக்கு இழுக்கும் பெண் மீது காவல்துறை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் விக்டோரியா என்கிற ராணி (48). இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகளுக்கு திருமணமாகிவிட்டது; மகன் கடை வைத்துள்ளார். மகன் முஸ்லீமாக மதம் மாறி விட்டார்.
திருப்பூரில் பணி புரிந்து கொண்டிருந்தபோது விக்டோரியாவுக்கு, திருப்பூர் மாஸ்கோ நகரில் உள்ள ஒரு நபருடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த நபருக்கும் குடும்பம் உள்ள நிலையில், தனது கள்ள உறவை பயன்படுத்தி அந்த நபரிடம் இருந்து பணம், பொருட்களை விக்டோரியா பெற்று அனுபவித்து வந்துள்ளார்.
விக்டோரியாவின் மகன் வேறு மதத்தை சேர்ந்தவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவரது மகள் தமிழரசிக்கு, சில வருடங்களுக்கு முன்பு மேஜர் ஆகாத நிலையில் 17 வயதில் விரும்பமின்றி, ரகசியமாக சர்ச்சில் வைத்து கட்டாயத் திருமணம் செய்து வைத்துள்ளார் விக்டோரியா. தமிழரசியின் கணவரான இராமநாதபுரத்தை சேர்ந்த அகஸ்டினுக்கு 20 வயது வித்தியாசம் இருந்த நிலையில், இருவருக்கும் இடையே மனமொத்த திருமண வாழ்க்கை அமையவிலை; இல்லற வாழ்க்கை கசந்தது.
திருமணமான சில மாதங்களில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்ததாக கூறப்பபடுகிறது. இருவரையும் சமாதானம் செய்து வைத்து நன்றாக வாழுங்கள் என்று கூற வேண்டிய இடத்தில் உள்ள தாய் விக்டோரியோ, சொத்து கிடைக்க வழிவகை செய்யாத மகளின் மீது எரிச்சல் அடைந்தார். மகளின் மீதான கோபத்தாலும் தனது சுய லாபத்திற்காகவும் மருமகனிடம் போய், நீங்கள் வேறு திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கூறி இருக்கிறார்.
ஆனால், 2 பெண்களுடன் மிகவும் கஷ்டமான நிலையில் இருந்த மகள் தமிழரசி (எ) ஜாஸ்மின் பற்றி விக்டோரியா சிறிதும் கவலைப்படவில்லை. ஏற்கனவே அதிக வயது வித்தியாசமுள்ள விருப்பமில்லாத திருமணம், துளியும் கருணை இல்லாத தாய் என தமிழரசியின் வாழ்க்கை இருண்டு போனது. வீட்டு மாதாந்திர கடன், குழந்தைகள் படிப்பு , குடும்பச்செலவு என மிகவும் நொடிந்து போன தமிழரசி வாழ்க்கையின் விரக்திக்கு சென்று தற்கொலை செய்து கொள்வதற்கும் ஒருசிலமுறை முயன்றிருக்கிறார்.
பேராசை பிடித்த விக்டோரியா, தனது வாழ்க்கையை நாசப்படுத்தி தனது மகளின் வாழ்க்கையை கெடுத்ததோடு, பல நல்ல குடும்பங்களில் ஆண்களை வளைத்துப் போட்டு பலரின் வாழ்க்கையில் விளையாடி இருக்கிறாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
விக்டோரியாவின் பின்னணி என்ன? யாரையெல்லாம் இதுபோல் காம வலை விரித்து வீழ்த்தி மோசடி செய்திருக்கிறார்? முதல் கணவர் யார்? அவரது தொழில் என்ன? என்பனவற்றை காவல் துறை விசாரித்தால், பல அதிரடி உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும்.இதுபோன்ற மோசடிகள் தொடராமல் இருக்க சட்டத்தின்படி விக்டோரியாவை விசாரித்து, உரிய தண்டனை வழங்கினால் மட்டுமே , மோசடி ராணிகள் உருவாகாமல் இருப்பார்கள்; பல நல்ல குடும்பங்கள் காப்பற்றப்படும். திருப்பூர் காவல் துறை இந்த விஷயத்தில் தயவு தாட்சண்யம் பார்க்காமல் உடனே விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.