கேரள பாதிரியார் ஜார்ஜ் ஜேக்கப்புக்கு (51) கார்டினல் பட்டத்தை வழங்கி போப் பிரான்சிஸ் கவுரவித்துள்ளார். ரோம் செயின்ட் பசிலிக்கா தேவாலயத்தில் நடைபெற்ற விழாவில் ஜார்ஜ் உள்ளிட்ட 21 பேருக்கு இப்பட்டத்தை போப் அளித்தார்.
கேரள மாநிலம், சங்கனாச்சேரியை சேர்ந்த ஜேக்கப், இந்தியாவில் இருந்து தேர்வான 6ஆவது கார்டினல் ஆவார். அவருக்கு கேரள CM பினராயி விஜயன், PM மோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.