திருப்பூர் மாவட்டம், தாராபுரம், கரூர் சாலையில் உள்ள, காடு ஆஞ்சநேயர் கோவிலில், கார்த்திகை மாத சனிக்கிழமை முன்னிட்டு, ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை இன்று நடைபெற்றது.
இந்த பூஜையில் ஆஞ்சநேயருக்கு பல்வேறு விதமான, திரவியங்களைக் கொண்டு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது. இந்த சிறப்பு பூஜையில் தாராபுரம் சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் பொது மக்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.