சிவாஜி கணேசனுக்கு முதல்வர் மரியாதை..!
நடிகர் சிவாஜி கணேசனின் 97ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை அடையாரில் உள்ள மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து, திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
மேலும், புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு மற்றும் நடிகர் பிரபுவின் குடும்பத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




