ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை உள்ள உலக பிரசித்தி பெற்ற ஆயிரம் ஆண்டுகளுக்கு கடந்த கம்பீரமாக காட்சி அளிக்கும் அருள்மிகு சிநேகவல்லி உடனாய ஆதிரெத்தினேஸ்வரர் ஆலயம் உள்ளது.
இந்த ஆலயத்திற்கு ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் தனது ஆதரவாளர்களுடன் வந்து சிறப்பு வழிபாடு செய்தார்.இது பற்றி சிவாச்சாரியார்களிடம் கேட்டபோது அவர் சிறப்பு வழிபாடு செய்தார் என்றும் 300 நாமம் வாசித்து வழிபடும் நிகழ்வு திருசதி என்று அழைக்கப்படுகிறது.
இந்த வழி பாடு செய்வதன் மூலம் வாழ்வில் நன்மைகளும் பதவி உயர்வு கிடைக்கும் என்று தெரிவித்தனர். அதன் பொருட்டு சுவாமி தரிசனம் செய்தார். உடன் கட்சி நிர்வாகிகள் பல இருந்தனர்