திருவாடானை அருள்மிகு ஸ்ரீ சினேகவல்லி அம்மன் உடனாய ஸ்ரீ ஆதிரெத்தினேஸ்வரர் ஆலய ஆடிபூர திருவிழா கொடியேற்றம்..!

திருவாடானை அருள்மிகு ஸ்ரீ சினேகவல்லி அம்மன் உடனாய ஸ்ரீ ஆதிரெத்தினேஸ்வரர் ஆலய ஆடிப்பூர திருவிழா நடைபெற உள்ளது. இதற்காக நேற்று வியாழக் கிழமை கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

 

திருவாடானையில் ராமநாதபுரம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட பழமைவாய்ந்த வரலாற்று சிறப்பு மிக்க சினேகவல்லி அம்மன் சமேத ஸ்ரீ ஆதிரெத்தினேஸ்வரர் சிவன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் ஆடிப்பூரத்  திருவிழா நடைபெறுவதை  உள்ள நிலையில் இன்று விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

இன்றிலிருந்து ஒவ்வோர் நாளும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதணைகள் நடைபெறும். அதனை தொடர்ந்து சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். வருகிற ஆகஸ்ட் 6ம் தேதி திருத்தேர் ஊாவலம், ஆகஸ்ட் 9 ம் தேதி திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.
அதற்கடுத்தநாள் தீர்த்தவாரி நிகழ்வுடன் வைகாசி  திருவிழா நிறைவுபெறும் .