ஏசி வேலை செய்யாததால் அபாய சங்கலியை இழுத்த பயணிகள்..!

தாம்பரம் – நாகர்கோயில் விரைவு ரயில் ஏசி வேலை செய்யாததால் பயணிகள் அபாய சங்கலியை இழுத்து அதிகாரிகளோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சென்னை தாம்பரத்திலிருந்து – நாகர்கோவிலுக்கு நாள்தோறும் விரைவு ரயில் இயக்கப்படுகிறது என கூறப்படுகிறது.

 

தாம்பரம் ரயில் நிலையத்தில் அதிகாரிகளிடம் பயணிகள் கேள்வி எழுப்பிய நிலையில் செங்கல்பட்டு செல்வதற்குள் சரி செய்யப்படும் என அவர்கள் கூறியதாக தெரிகிறது.

 

இந்த நிலையில் செங்கல்பட்டு நிலையத்திற்கு ரயில் நிலையத்திற்கு சென்ற பொழுது ஏசி பழுது சரி செய்யப்படாததால் ஆத்திரமடைந்த பயணிகள் ரயில் புறப்படும் பொழுது அபாய சங்கலியை பிடித்து இழுத்தனர்.

 

தொடர்ந்து அதிகாரிகளோடு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து தற்காலிகமாக ஏசி பழுது நீக்கப்பட்ட பின்பு 40 நிமிடங்கள் விரைவு ரயில் நாகர்கோவில் நோக்கி புறப்பட்டது.