இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர்..ஐ.நா பள்ளி மீது தாக்குதல்..!

ஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர் 10ஆவது மாதத்தை எட்டியுள்ளது. இது வரை காசாவில் வாழ்ந்த 90% மக்கள் வேரோடு பிடுங்கி எறியப்பட்டுள்ளனர். குறிப்பாக, குழந்தைகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

 

இந்நிலையில், காசாவில் ஐநாவால் நடத்தப்படும் பள்ளியில் நடத்தப்பட்ட வான் தாக்குதலில், 16 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.