மோசமான வானிலை..கீழே விழுந்து நொறுங்கிய விமானம்..!

கொலம்பியாவில் மோசமான வானிலையால் விமானம் விழுந்து நொறுங்கியதில் 2 பேர் உயிரிழந்தனர். கொலம்பியாவின் வடக்கு பகுதியிலுள்ள அட்லாண்டிக்கோ மாகாணத்தில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியது.

 

சத்தம் கேட்டு அங்கு திரண்ட மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் இரண்டு பேரை மீட்டனர்.

 

மோசமான வானிலை காரணமாக விமானம் விபத்திற்கு உள்ளானதாக அந்த மாகாண காவல்துறை உயர் அதிகாரி ஜான் தெரிவித்தார்.